இந்தியா

தொழிற்சாலைகளுக்கான நிலக்கரி விநியோகத்தையும் குறைத்த ஒன்றிய பாஜக அரசு.. பிரதமருக்கு 10 கூட்டமைப்பு கடிதம்!

நிலக்கரியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று அலுமினியம், இரும்பு தாயரிப்பு உள்ளிட்ட 10 துறைகளின் கூட்டமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது.

தொழிற்சாலைகளுக்கான நிலக்கரி விநியோகத்தையும் குறைத்த ஒன்றிய பாஜக அரசு.. பிரதமருக்கு 10 கூட்டமைப்பு கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அனல்மின் நிலையங்களைத் தொடர்ந்து தொழிற் சாலைகளுக்குத் தேவைப்படும் நிலக்கரியும் பெருமளவுக்கு குறைப்பு. சிமெண்ட், அலுமினியம், இரும்பு தொழிற் சாலைளுக்கான நிலக்கரி தட்டுப்பாட்டை சரிசெய்ய வேண்டும் என்று 10 துறைகளை சேர்ந்தவர்கள் கூட்டாக பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அதன்படி, இந்தியாவில் செயல்படும் 150 அனல்மின் நிலையங்களில் 85 கடும் நிலக்கரி தட்டுப்பாட்டில் உள்ளன. இதே போல் மற்ற தொழிற் சாலைகளுக்கான நிலக்கரி விநியோகத்தையும் கோல் இந்தியா குறைத்துள்ளது.

இதனால் அனல்மின் நிலையங்கள் போல் மற்ற தொழிற் சாலைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே போதுமான நிலக்கரியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று அலுமினியம், இரும்பு தாயரிப்பு உள்ளிட்ட 10 துறைகளின் கூட்டமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஸ்டீல் தொழிற்சாலைகளுக்கு 27% நிலக்கரியும், சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு 14% நிலக்கரியும், இரும்பு தொழில்சாலைகளுக்கு 20% நிலக்கரியும், அனல்மின் நிலையங்களுக்கு 32% நிலக்கரியும் குறைக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories