இந்தியா

”பாஜகவின் அலுவலகமாக மாறும் ராஜ்பவன்கள்: பேராசையை புது மதமாக மாற்றும் மோடி அரசு” - கேரள MP பினாய் விஸ்வம்

பாஜக கையில் கருவியாக ஆளுநர் வசிப்பிடமான ராஜ்பவன் உள்ளது. ராஜ்பவன் பாஜவின் அலுவலகமாக மாறி வருகிறது என்று கேரள மாநில அரசின் முன்னாள் வனத்துறை அமைச்சர்தெரிவித்துள்ளார்.

”பாஜகவின் அலுவலகமாக மாறும் ராஜ்பவன்கள்: பேராசையை புது மதமாக மாற்றும் மோடி அரசு” - கேரள MP பினாய் விஸ்வம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநில அரசின் வனத்துறை முன்னாள் அமைச்சர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான பினாய் விஸ்வம் எம்.பி மற்றும் தமிழக மாநிலத் தலைவர் முத்தரன் இருவரும் தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய பினாய் விஸ்வம் எம்.பி:

பெட்ரோலியம் விலை உயர்வு போன்ற பல பிரச்சனைகளை நம் நாடு சந்தித்து வருகிறது. மோடி அரசு மக்களுக்காக இல்லை. இது அதானிக்கும் அம்பானிக்கும் அவர்களின் ஆசைகளுக்காகவும் போராடிக் கொண்டு உள்ளது.

பேராசை தற்பொழுது ஒரு புது மதமாக மோடி அரசாங்கத்தில் மாறி உள்ளது.மோடியும் அவரது நிறுவனமும் லாபம் ஈட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். மோடி அரசு நாடு முழுவதும் வகுப்புவாத பதற்றத்தை உருவாக்கி வருகின்றனர்.

அமித்ஷா சமீபத்தில் புதுச்சேரியில் உரையாற்றினார். அவரின் உரை முழுவதும் ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற போதனைகளே அதிகம். அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.

2024 தேர்தலில் பாஜகவை எதிர்த்துப் போராட அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் கூட்டணி சேறும் என்று நாங்கள் நம்புகிறோம். தேர்தல் போரில் கேரளா, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களுக்கு பெரிய பங்கு உண்டு.

பாஜக கையில் கருவியாக ஆளுநர் வசிப்பிடமான ராஜ்பவன் உள்ளது. அனைத்து இடத்திலும் ராஜ்பவன் பாஜவின் அலுவலகமாக மாறி வருகிறது. தமிழகத்தில் நடப்பது கேரளாவிலும் நடக்கிறது.

அவர்கள் (ஆளுநர்) இன்று பல்கலைக்கழகங்களின் இன்றைய நடவடிக்கைகளில் தலையிடுகிறார்கள். இது கூட்டாட்சி மதிப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் ஒன்று. நாட்டின் அறிவியல் மனோபாவத்திற்கு எதிரான புதிய கல்விக் கொள்கை குறித்த தேசிய கருத்தரங்கை AIASF ஏற்பாடு செய்கிறது.

2024 தேர்தலை எதிர்கொள்ள பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை திரட்டும் தமிழக முதல்வர் ஸ்டாலின் முயற்சியை வரவேற்கிறோம்.

banner

Related Stories

Related Stories