கொரோனா பரவலின் இரண்டாவது அலை முடிந்து மூன்றாவது அலை ஏற்பட்டும் பெரிதளவில் எந்த பாதிப்பும் ஏற்படாததால் தேவைப்பட்டால் கூட்டம் ஏதும் இல்லாத இடங்களில் முகக்கவசம் அணிவதை தவிர்த்துக்கொள்ளலாம் என ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருந்தது.
அதன்படி அண்மை நாட்களாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்தளவிலேயே பதிவாகி வந்தது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 2,451 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியிருக்கிறது. இப்படி இருக்கையில் பல மாநிலங்களில் மாஸ்க் அணிவது மீண்டும் கட்டாயமாக்கியுள்ளது அம்மாநில அரசு.
அதேபோல, டெல்லிக்கு செல்வோரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் கூறப்படுகிறது. ஏனெனில், முன்பு வந்த மூன்று அலைகளும் டெல்லியில் இருந்துதான் பெரும்பாலும் தொடங்கியது என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
கொரோனா மூன்றாவது அலைக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்தையும் அரசு மேற்கொண்டு வருகிறது. மாநில அரசுகள் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தால், அதனை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது.
ஆனால் இந்த தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிக அளவில் ஏற்படுவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு மக்களை அச்சுறுத்தும் வேலையை தொடங்கியுள்ளது. மேலும் உண்மை விவரங்களை வெளியிடாமல் மூடி மறைக்கும் செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் மக்கள் இந்தியாவில் மீண்டும் ஊரங்கிற்கு வாய்ப்பு இருக்குமோ என்ற அச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஊடங்கள் வெளியிடுவது போல, கொரோனா மூன்றாம் அலைக்கு வாய்ப்பு இல்லை என கொரோனா தொற்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கொரோனா தரவு ஆய்வாளர் விஜய் ஆனந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இந்தியாவில் தினசரி புதிய தொற்றுகள் எண்ணிக்கை, நேற்று 2527 ஆக பதிவாகியுள்ளது. சோதனை நேர்மறை விகிதத்துடன் 0.56% பதிவாகியுள்ளன. மேலும் கடந்த சில நாட்களில் புதிய கொரோனா தொற்றின் வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. எனவே புதிய அலை ஏற்பட வாய்ப்பில்லை என்பதை இந்த புள்ளி விவரம் குறிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.