இந்தியா

தத்ரூபமாக நுண்கலை வடிவில் தமிழணங்கு சிலை.. புதுவை அரசுப்பள்ளி மாணவனுக்கு குவியும் பாராட்டு!

தத்ரூபமாக நுண்கலை வடிவில் தமிழணங்கு சிலை.. புதுவை அரசுப்பள்ளி மாணவனுக்கு குவியும் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்த தமிழணங்கு ஓவியத்தை, இயற்கை பொருட்களை கொண்டு நுண்கலை சிற்பமாக உருவாக்கிய புதுச்சேரி அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

தத்ரூபமாக நுண்கலை வடிவில் தமிழணங்கு சிலை.. புதுவை அரசுப்பள்ளி மாணவனுக்கு குவியும் பாராட்டு!

புதுச்சேரி அருகே பாகூர் பாரதியார் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிப்பவர் முத்தமிழ்ச்செல்வன். இவர் அங்குள்ள சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போது, நுண்கலை ஆசிரியர் உமாபதியிடம் கிராம புறங்களில் பயனற்று கிடக்கும் தென்னை நார், வாழை மட்டை, பனை மர பொருட்கள் ஆகியவற்றை கொண்டு நுண்கலை பொருட்களை உருவாக்கும் பயிற்சியை பெற்றார்.

தத்ரூபமாக நுண்கலை வடிவில் தமிழணங்கு சிலை.. புதுவை அரசுப்பள்ளி மாணவனுக்கு குவியும் பாராட்டு!

இந்நிலையில் ஓவியர் சந்தோஷ் நாராயணன் உருவாக்கிய ”தமிழணங்கு” ஓவியத்தை இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் ட்விட்டரில் பதிவிட்டதை தொடர்ந்து, அதனை மாணவர் முத்தமிழ்செல்வன் சோலை இலை மற்றும் மூங்கிலை கொண்டு நுண்கலை சிற்பமாக வடிவமைத்து அசத்தியுள்ளார்.

இந்த நுண்கலை சிற்பம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த சிற்பத்தை உருவாக்கிய மாணவர் முத்தமிழ்செல்வனுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories