இந்தியா

பேயை விரட்டுவதாக நாடகமாடி 14 வயது சிறுமியை சீரழித்த போலி சாமியார்.. மத்திய பிரதேசத்தில் நடந்த கொடூரம்!

நிஹல் பெக் என்ற பழ வியாபாரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது போபால் காவல்துறை.

பேயை விரட்டுவதாக நாடகமாடி 14 வயது சிறுமியை சீரழித்த போலி சாமியார்.. மத்திய பிரதேசத்தில் நடந்த கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பேய் விரட்டுவதாகச் சொல்லி 10ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை 6 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதான பழ வியாபாரி கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பாக நிஹல் பெக் என்ற பழ வியாபாரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது போபால் காவல்துறை.

அதன்படி, போபாலில் உள்ள ஹபிப்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் பழ வியாபாரியான நிஹல் பெக் (30). அதே ஊரைச் சேர்ந்த எலக்ட்ரானிக் பொருட்களை விற்கும் தொழிலதிபரின் மகளைதான் நிஹல் பாலியன் கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார்.

சிறுமியின் தாயார் தனியார் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார். கொரோனா காரணமாக எலக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் சிறுமியின் தந்தை தொழில் மோசமான வீழ்ச்சியை அடைந்திருக்கிறது.

இது குறித்து அறிந்த பழ வியாபாரியான நிஹல், அவரிடம் உங்கள் வீட்டில் ஆவி புகுந்திருப்பதால்தான் உங்கள் தொழில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அதனை சிறப்பு பூஜை மற்றும் சடங்குகள் செய்து விரட்டிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என தெரிவித்திருக்கிறார்.

இதனை நம்பிய அந்த தொழிலதிபரும் நிஹலை வீட்டுக்குள் அனுமதித்து பேயை விரட்டும் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அப்போது, சடங்கு நடக்கும் போது வீட்டில் உள்ள அனைவரும் அவரவர் அறைகளிலேயே இருக்க வேண்டும். வெளியே வரக்கூடாது எனவும் நிஹல் எச்சரித்திருக்கிறார்.

நிஹல் பெக்கின் பேச்சின் படியே வீட்டில் இருந்தவர்களும் பின்பற்றியிருக்கிறார்கள். அந்த சமயத்தில்தான் உங்கள் வீட்டில் உள்ள பேயை விரட்டி உன் பெற்றோருக்கு நல்ல எதிர்காலம் கிடைக்க வேண்டும் என்றால் என்னுடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என 14 வயது சிறுமியை நிஹல் மிரட்டியிருக்கிறார்.

இப்படியாக வாரத்திற்கு இருமுறை என தொடர்ந்து ஆறு மாதமாக இந்த பாதக செயலில் ஈடுபட்டிருக்கிறார் நிஹல் பெக். இப்படி இருக்கையில் பேயை விரட்டி விட்டதால் இனி வீட்டுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி நிஹல் சென்றிருக்கிறார்.

அப்போதுதான் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சியுற்ற அவர்கள் போலிஸாரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த போலிஸார் நிஹல் பெக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories