இந்தியா

கட்டுக்கடங்காத டீசல் திருடர்கள் அட்டூழியம்.. சுட்டுப்பிடித்த போலிஸ்.. பெங்களூரில் பரபரப்பு!

டீசல் திருடனை ஜிகனி பகுதியில் போலிஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.

கட்டுக்கடங்காத டீசல் திருடர்கள் அட்டூழியம்.. சுட்டுப்பிடித்த போலிஸ்.. பெங்களூரில் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே ஆனைக்கல் பகுதியில் அதிக அளவில் சரக்கு வாகனங்களில் டீசல் திருட்டு நடைபெற்று வருகிறது. இது தொடர்பான புகாரின் அடிப்படையில் போலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிப்ரபடுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் டி.எல்.எஃப் தொழிற்சாலை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனத்தில் இருந்து ஒரு நபர் டீசல் திருடுவதையும் அதற்கு காவலுக்கு சிலர் இருந்ததையும் போலிஸார் பார்த்துள்ளனர்.

உடனடியாக அந்த நபர்களை சரணடைய போலிஸார் அறிவுறுத்திய நிலையில் டீசல் திருடர்கள் திடீரென தங்களிடம் இருந்த ஆயுந்தங்களை கொண்டு போலிஸாரை தாக்கியுள்ளனர்.

இதில் சில போலிஸார் காயமடைந்ததை அடுத்து டீசல் திருடர்கள் மீது போலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் சீனிவாஸ் என்ற நபர் கீழே விழுந்துள்ளார். மற்ற நபர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இதனையடுத்து துப்பாக்கி குண்டு பாய்ந்த நபரை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து ஒரு கார் மற்றும் டீசல் நிரப்பிய ஏராளமான கேன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories