பாம்பென்றால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் இளைஞர் ஒருவரோ தாகத்தோடு இருந்த பாம்பிற்குத் தண்ணீர் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதில், இளைஞர் ஒருவர் தனது கையில் தண்ணீரை ஊற்றி அதை பச்சை நிற பாம்பின் அருகே கொண்டு செல்கிறோர். உடனே அந்தப் பாம்பு அவரை கடிக்காமல்' அன்னப் பறவையை' போல் தண்ணீரை மட்டுமே குடிக்கிறது.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மேலும் எப்படி இவரால் பாம்பைக் கண்டு பயப்படாமல் ஒரு குழந்தைக்குத் தண்ணீர் கொடுப்பது போல் பாம்பிற்கு தண்ணீர் கொடுக்க முடிந்தது என்றும் நெட்டிசன்கள் வியந்து வருகின்றனர்.
மேலும் இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து தண்ணீரில் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். அவரது அந்த ட்விட்டர் பதிவில், "கோடை காலம் நெருங்குகிறது. சிறு துளி தண்ணீர் கூட ஒருவரின் உயிரைக் காப்பாற்றும். உங்கள் தோட்டத்தில் சிறிது தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றிவைத்தால் அது பல விலங்குகள் உயிர் வாழ வழிவகுக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.