இந்தியா

“2022ம் ஆண்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 92% பேர் தடுப்பூசி போடாதவர்கள்” : ICMR ‘பகீர்’ எச்சரிக்கை!

2022ம் ஆண்டில் ஏற்பட்ட உயிரிழப்பில் 92% பேர் தடுப்பூசி போடாதவர்கள் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

“2022ம் ஆண்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 92% பேர் தடுப்பூசி போடாதவர்கள்” : ICMR ‘பகீர்’ எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் மட்டும் தினந்தோறும் 8 லட்சத்திற்கும் அதிகமாகத் தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது.

இதேபோன்று இந்தியா, பிரிட்டன், பிலிப்பைன்ஸ், தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அதேநேரம் புதிதாகக் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்றும் உலகம் முழுவதும் பரவி வருகிறது.

இதனால் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பெரிதாக கொரோனா தொற்றால் பாதிப்படையாததால், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2022ம் ஆண்டில் ஏற்பட்ட உயிரிழப்பில் 92% பேர் தடுப்பூசி போடாதவர்கள் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சுகாதார அமைச்சகத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய டாக்டர் பார்கவா, “இந்த ஆண்டில் ஏற்பட்ட 92 சதவீத கொரோனா மரணங்கள் தடுப்பூசி போடாதவர்கள். மக்களிடையே அதிகம் தடுப்பூசி செலுத்தப்பட்டதால், பல லட்சம் மக்களை பாதுகாத்துள்ளது. எனவேமக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories