கர்நாடகா மாநிலம் கும்பகல்லு கிராமத்தில் அக்கீம் என்பவர் அரசின் அனுமதி பெற்று கல்குவாரி நடத்தி வருகிறார். இந்த கல்குவாரியில் நேற்று வெடிவைத்து பாறைகள் தகர்க்கப்பட்டது. அப்போது வெடியில் ஏற்பட்ட அதிர்வுகள் காரணமாகப் பாறை ஒன்று மலையிலிருந்து உருண்டு கீழே விழுந்தது.
அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்தவர்கள் கீழே விழுந்த பாறையில் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அவர்களை மீட்கும் பணி வேகமாக நடைபெற்றது. ஆனால், 10 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 6 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாறை உருண்டு விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.