இந்தியா

"இறந்த மாணவர் உடலுக்கு பதில் 8 பேரை கூட்டிவரலாம்": சடலத்தை கொண்டு வருவது குறித்து BJP MLA சர்ச்சை பேச்சு!

உக்ரைனில் இறந்த மாணவரின் உடலை எடுத்து வருவது குறித்து பா.ஜ.க எம்.எல்.ஏ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"இறந்த மாணவர் உடலுக்கு பதில் 8 பேரை கூட்டிவரலாம்": சடலத்தை கொண்டு வருவது குறித்து BJP MLA சர்ச்சை பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உக்ரைன், ரஷ்யாவிற்கு இடையேயான தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற மாணவர் உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் மருத்துவம் படித்து வந்தார். இந்நிலையில் இவர் இந்த தாக்குதலின் போது உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இவரது உடலை இந்தியாவிற்குக் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தங்களின் மகன் உடலையாவது பார்க்க முடியுமா என்ற கவலையுடன் மாணவரின் பெற்றோர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், இறந்த மாணவனின் உடலை எடுத்து வருவது குறித்து பா.ஜ.க எம்.எல்.ஏ பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் பெல்லாட், "மாணவர்களை உக்ரைனில் இருந்து மீட்டு வருவது மிகவும் சவாலாக இருக்கிறது. மேலும் இறந்தவர்களின் உடலை கொண்டுவருவது இன்னும் கடினமாகிவிட்டது. இறந்தவர் உடல் விமானத்தில் அதிகமான இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. அந்த இடத்தில் 8 முதல் 10 பேர் வரை ஏற்றிக்கொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories