இந்தியா

ரூ.2,000க்காக எய்ட்ஸ் இருக்கு என கூறிய மருத்துவமனை ஊழியர் : பிரசவமான நாளில் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

லஞ்சம் கொடுக்க மறுத்ததால் குழந்தைக்கும் தாய்க்கும் எய்ட்ஸ் நோய் இருப்பதாக மருத்துவமனை ஊழியர் கூறியது ஆந்திராவில் பீதியை கிளப்பியிருக்கிறது.

ரூ.2,000க்காக எய்ட்ஸ் இருக்கு என கூறிய மருத்துவமனை ஊழியர் : பிரசவமான நாளில் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆந்திராவின் கடப்பாவில் உள்ள சோமபுரா பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் கடந்த ஞாயிறன்று நெஞ்சு வலி காரணமாக அரசு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார்.

அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அன்றைய இரவே அந்த பெண்ணுக்கு பிரசவம் ஆகியுள்ளது.

அப்போது, மருத்துவமனை ஊழியர் ஒருவர் 2000 ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என கேட்டிருக்கிறார். அதனை அப்பெண் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மருத்துவமனை ஊழியர் பெண்ணுக்கும், பிறந்த சிசுவுக்கும் எய்ட்ஸ் நோய்த்தொற்று இருப்பதாக பொய்க் கூறி பீதியை கிளப்பியிருக்கிறார்.

ரூ.2,000க்காக எய்ட்ஸ் இருக்கு என கூறிய மருத்துவமனை ஊழியர் : பிரசவமான நாளில் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

இதனையறிந்த பெண்ணின் கணவரும் உறவினர்கள் முதலில் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். பின்னர் எச்.ஐ.விக்கான பரிசோதனை முடிவுகளை கேட்டபோது அந்த ஊழியர் முன்னுக்குப்பின் முரணாக பேசியிருக்கிறாராம்.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து போலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்திருக்கிறார்கள். அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் லஞ்சம் தராத காரணத்தால் எய்ட்ஸ் இருப்பதாக பொய்க் கூறியதாக மருத்துவமனை ஊழியர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இதனையடுத்து அந்த ஊழியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை கண்காணிப்பாளர் உத்தரவாதம் கொடுத்திருக்கிறார். இதுபோக, பிரசவமான பெண்ணின் கணவர் பொதட்டூர் காவல் நிலையத்தில் இந்த விவகாரம் குறித்தும் புகார் கொடுத்திருக்கிறார்.

அதன் மீது வழக்குப்பதிவு செய்த போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மருத்துவமனையில் இருந்த பிற நோயாளிகள் மற்றும் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

banner

Related Stories

Related Stories