இந்தியா

"ரஷ்ய மக்களுடன் நில்லுங்கள்".. ஜே.பி. நட்டாவின் சர்ச்சை ட்வீட்: ஹேக்கர்கள் அட்டகாசம்!

பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

"ரஷ்ய மக்களுடன் நில்லுங்கள்".. ஜே.பி. நட்டாவின் சர்ச்சை ட்வீட்: ஹேக்கர்கள் அட்டகாசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன் தலைநகர் கிவ்வை விட்டு மக்கள் வெளியேறி வருகின்றனர்.

மேலும் இருநாடுகளும் தாக்குதலை கைவிட்டுவிட்டு பேச்சுவார்த்தையில் தீர்வுகான வேண்டும் என உலக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல் உக்ரைன் நாட்டிற்குள் ரஷ்ய ராணுவம் விரைந்து முன்னேறி வருவதால் தங்கள் நாட்டு மக்களை விமானங்கள் மூலம் உலக நாடுகள் அழைத்துச் கொண்டு செல்கின்றன.

இந்தியாவும் உக்ரைன் நாட்டில் இருக்கும் தங்கள் நாட்டு மாணவர்களை சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து கொண்டு வருகிறது. உக்ரைனில் இருந்து இவர்கள் வெளியே பக்கத்து நாட்டு அரசுகள் உதவி செய்து வருகிறது.

"ரஷ்ய மக்களுடன் நில்லுங்கள்".. ஜே.பி. நட்டாவின் சர்ச்சை ட்வீட்: ஹேக்கர்கள் அட்டகாசம்!

இந்நிலையில், ரஷ்யாவிற்கு ஆதரவாக பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் ட்விட்டர் பதிவு வெளியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பின்னர்தான் அவரின் ட்விட்டர் கணக்கு ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டது தெரியவந்தது.

அந்த ட்விட்டர் பதிவில்,"உக்ரைன், ரஷியாவுக்கு கிரிப்டோ கரன்சி மூலம் நிதி உதவி அளிக்க வேண்டும்" என பதிவிடப்பட்டிருந்தது இதையடுத்து சிறிது நேரத்திலேயே அவரது கணக்கு ஹேக்கர்களிடமிருந்து மீட்கப்பட்டது.

அண்மையில் கூட பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டு கிரிப்டோ கரன்சிக்கு ஆதரவாகப் பதிவு வெளியானது. மேலும் ஒன்றிய செய்தி ஒலிபரப்பு துறையின் ட்விட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories