இந்தியா

“இந்தியா இதுவரை காணாத மிகப்பெரிய வங்கி மோசடி”: 28 வங்கியில் ரூ.22,842 கோடி பணத்தை சுருட்டிய ABG நிறுவனம்!

குஜராத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று 28 வங்கிகளில் கடன் மோசடி செய்திருக்கும் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

“இந்தியா இதுவரை காணாத மிகப்பெரிய வங்கி மோசடி”: 28 வங்கியில் ரூ.22,842 கோடி பணத்தை சுருட்டிய ABG நிறுவனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குஜராத்தை தலைமையிடமாக கொண்டு ABG என்ற கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மேலும் தஜெஹ் , சூரத்தில் கட்டுமான தளங்களை கொண்டுள்ள இந்நிறுவனம் 16 ஆண்டுகளில் 165 கப்பல்களை கட்டிகொடுத்துள்ளது. இந்நிலையில் இந்த கப்பல் கட்டும் நிறுவனம் 28 வங்களில் ரூ.22,842 கோடிக்கு கடன் வாங்கி மோசடி செய்துள்ளதை சி.பி.ஐ விசாரணையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்நிறுவனத்தின் மீது 2019ம் ஆண்டு ஸ்டேட் பேங்க் ஆஃப் புகார் செய்துள்ளது. இந்த வழக்கு குறித்து சி.பி.ஐ விசாரித்தபோது, 2012ம் ஆண்டில் இருந்து 2017 வரை சிங்கப்பூரில் உள்ள துணை நிறுவனங்களுக்கு அதிக அளவில் பணம் அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் ரிஷி அகர்வால், சந்தானம் முத்துசாமி, அஷ்வின் குமார் ஆகியோர் மீது சி.பி.ஐ வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியது.

இதில், ஐ.சி.ஐ.சி.ஐ, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐ.டி.பி.ஐ வங்கி, பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 28 வங்கிகளில் 22,842 கோடி ரூபாய் கடனாக பெற்று திருப்பி செலுத்தாமல் இருந்தை சி.பி.ஐ கண்டுபிடித்து வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.

இதையடுத்து சூரத், மும்பை, புனே, பாரூச் உள்ளிட்ட 13 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடியாக சோனை செய்து பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வளவு பெரிய கடன் மோசடி இந்தியாவில் நடைபெறவில்லை. இதற்கு முன்பு வங்கியில் கடன் வாங்கிக் கொண்டு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடியை விட மிஞ்சியதாகும்.

பிரதமர் மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது இந்த நிறுவனத்திற்கு 1.21 லட்சம் சதுரடி நிலம் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2018ம் ஆண்டே இந்நிறுவனத்தில் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி முன்வைத்தது. இந்நிலையில்தான் இந்நிறுவனத்தின் வங்கி மோசடி பூதாகரமாக வெடித்துள்ளது.

banner

Related Stories

Related Stories