தெலங்கானா மாநிலம், கோதாவரிகானி பேருந்து நிலையத்திலிருந்து கரீம் நகர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் முகமது அலி என்பவர் தன்னுடைய சண்டை சேவலுடன் பயணம் செய்து கொண்டிருந்தார்.
இதைப்பார்த்த பேருந்தின் கண்டக்டர் ஜி.திருப்பதி என்பவர் சேவலுக்கும் சேர்த்து தனியாக டிக்கெட் எடுக்க வேண்டும், இல்லை என்றால் பேருந்திலிருந்து கீழே இறங்க வேண்டும் என கூறினார். இதைக்கேட்டு முகமது அலி அதிர்ச்சியடைந்துள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் சேவலுக்கும் சேர்ந்தது ரூ. 30 கொடுத்து முகமது அலி டிக்கெட் இருந்துள்ளார். இந்த சம்பவத்தை பேருந்தில் பயணம் செய்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து சேவலுக்கு கட்டணம் வசூலித்த நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து கோதாவரிகன் பேருந்து டிப்போ மேலாளர்,"சேவலுக்கு டிக்கெட் எடுத்த நடத்துநரிடம் முழுமையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.