இந்தியா

பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் காலமானார்.. முதன்முதலில் CEOவாக பதவியேற்ற இளம் இந்தியர் இவர்தான்..!

பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் இன்று காலமானார்.

பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் காலமானார்.. முதன்முதலில் CEOவாக பதவியேற்ற இளம் இந்தியர் இவர்தான்..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பஜாஜ் குழும முன்னாள் தலைவர் ராகுல் பஜாஜ் இன்று காலமானார். அவருக்கு வயது 83. இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ராகுல் பஜாஜ் குறிப்பிடத்தக்கவராக திகழ்ந்தார்.

1938ஆம் ஆண்டு பிறந்த ராகுல் பஜாஜ் பொருளாதாரம் மற்றும் சட்ட பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்றுள்ளார்.

ராகுல் பஜாஜ், 1965ஆம் ஆண்டு நிர்வாக அலுவலராக பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் 1968ல் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்றார். இத்தகைய பதவியை ஏற்ற இளம் இந்தியர் என்ற பெருமையையும் ராகுல் பஜாஜ் அப்போது பெற்றார்.

ராகுல் பஜாஜின் பொறுப்பின்கீழ், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அசுர வளர்ச்சியை பெற்றதோடு தனக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டது.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பஜாஜ் ஆட்டோ வளர்ச்சிக்கு ராகுல் பஜாஜ் முக்கிய பங்காற்றினார். 1965ஆம் ஆண்டில் பஜாஜ் ஆட்டோ மொத்த வருவாய் ரூ. 3 கோடியாக இருந்தது. 2008இல் மொத்த வருவாய் ரூ.10 ஆயிரம் கோடியாக அதிகரித்தது.

பிரபல தொழிலதிபர் ராகுல் பஜாஜ் காலமானார்.. முதன்முதலில் CEOவாக பதவியேற்ற இளம் இந்தியர் இவர்தான்..!

ராகுல் பஜாஜ் 2001ஆம் ஆண்டில் பத்ம பூஷன் விருது பெற்றார். 2006-10 வரை காங்கிரஸ் கட்சியின் சார்பாக ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார். கடந்த ஆண்டு இவர் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடல் நலக்குறைவால் ராகுல் பஜாஜ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலமானார். அவரது மறைவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் முன்னணி தொழிலதிபர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories