இந்தியா

பரபரப்பைக் கிளப்பிய போஸ்டர்.. மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடியில் சிக்கி பத்திரிக்கையாளர் பலி : நடந்தது என்ன?

ஒடிசா மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடியில் சிக்கி பத்திரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பைக் கிளப்பிய போஸ்டர்.. மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடியில் சிக்கி பத்திரிக்கையாளர் பலி : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஒடிசா மாநிலத்தில் பிஜூ ஜனதா தளம் தலைமையில் நவீன் பட்நாய ஆட்சி செய்து வருகிறார். விரைவில் அம்மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. மாநில அரசின் நடவடிக்கையைக் கண்டிக்கும் வகையில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டு அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், மதன்பூர் பகுதியில் மோகனகிரி என்ற பகுதியில் உள்ள பாலத்தின் அருகே தேர்தலை புறக்கணிக்கப்படி மாவோயிஸ்டுகள் சுவரொட்டி ஒன்றை ஒட்டிருப்பதாக பத்திரிக்கைத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி அம்மாநிலத்தைச் சேர்ந்த தினசரி நாளிதழில் பணியாற்றிய ரோகித் பிஸ்வால் (43) என்பவர் புகைப்படம் எடுக்கபட்டுப்பதற்காக நேற்றைய தினம் சென்றிருந்தார். அப்போது சுவரோட்டி அருகில் சென்ற போது அதைச் சுற்றி கண்ணிவெடி புகைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பரபரப்பைக் கிளப்பிய போஸ்டர்.. மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடியில் சிக்கி பத்திரிக்கையாளர் பலி : நடந்தது என்ன?

பின்னர் கண்ணிவெடியில் சிக்கிய ரோகித் பிஸ்வால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து காப்பாற்றும் படி கூறியுள்ளார். ஆனால் சம்பவ இடத்திற்கு போலிஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வருவதற்குள் குண்டு வெடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த பத்திரிக்கையாளருக்கு அம்மாநில முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். சுவரொட்டிகளை பாதுகாப்பு படையினர் அகற்றக் கூடாது என்பதற்காக சுவரொட்டிகளை சுற்றிலும் வெடிகுண்டுகளை புதைத்து வைத்திருப்பார்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories