இந்தியா

முன்னாள் இராணுவ அதிகாரியின் உயிரைக் காப்பாற்றிய Swiggy டெலிவரி பாய்... டெல்லியில் நடந்தது என்ன?

முன்னாள் இராணுவ அதிகாரியின் உயிரை ஸ்விக்கி டெலிவரி பாய் காப்பாற்றிய சம்பவம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

முன்னாள் இராணுவ அதிகாரியின் உயிரைக் காப்பாற்றிய Swiggy டெலிவரி பாய்... டெல்லியில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

புதுடெல்லியை சேர்ந்த மோகன் மாலிக் என்ற நபர், தனது மகனுடன் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான இவருக்கு, கடந்த டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி உடல்நலம் சரியில்லாமல் போனது.

இதையடுத்து, மோகன் மாலிக்கின் மகன், தனது தந்தையை, காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால், அந்த சமயத்தில், பயங்கர போக்குவரத்து நெரிசல் இருந்துள்ளது.

காரை ஒரு அடி கூட நகர்த்த முடியாத அளவிற்கு டிராஃபிக் இருந்த நிலையில், பைக்கில் சென்றவர்களிடம் அவரது மகன் உதவி கேட்டுள்ளார்.

ஆனால், யாரும் பைக்கை நிறுத்தாத நிலையில், உணவு டெலிவரி செய்வதற்காகச் சென்ற ஸ்விக்கி உணவு டெலிவரி நிறுவன ஊழியர் மிருணால், மோகனுக்கு உதவி செய்துள்ளார்.

அங்கிருந்த வாகன ஓட்டிகளிடம் பேசி டிராஃபிக்கை உடனடியாக சரி செய்த மிருணால், மோகன் மாலிக்கை, வேகமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்தச் சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கும் மேல் ஆகியுள்ள நிலையில், இதுகுறித்து மோகன் மாலிக், “எனக்கு வாழ்வளித்த அந்த இளைஞர் மட்டும் இல்லை எனில், எனது அன்பான குடும்பத்தினருடன் இன்று நான் இருந்திருக்க முடியாது. அவருக்கும் அவரைப் போன்ற டெலிவரி ஊழியர்களுக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தற்போது ஸ்விக்கி நிறுவனம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. இந்தப் பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், அந்த ஸ்விக்கி ஊழியருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

- கார்த்திகேயன்

banner

Related Stories

Related Stories