இந்தியா

“எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லை.. இதுதான் மோடி அரசின் சாதனை பட்ஜெட்டா?” : கொந்தளிக்கும் விவசாயிகள்!

எதிர்பார்த்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை என்றும், எந்தெந்த பயிர்களுக்கு எவ்வாறான நிர்ணயம் என்பது குறித்த திட்ட விரிவாக்கம் இல்லை எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

“எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லை.. இதுதான் மோடி அரசின் சாதனை பட்ஜெட்டா?” : கொந்தளிக்கும் விவசாயிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றைய தினம் தொடங்கியது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் நேற்று தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து இன்று, 2022-23ஆம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கலில் விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை பற்றி எந்த தகவலும் இடம்பெறாதது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட துணைத்தலைவர் பெரியசாமி கூறுகையில், எதிர்பார்த்த பட்ஜெட் இல்லை என்றும், விலை நிர்ணயம் முறையாக ரூபாய் 2.73 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், ஆனால் அது எந்தெந்த பயிர்களுக்கு எவ்வாறான நிர்ணயம் என்பது என விரிவாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்ல, குறிப்பாக சின்ன வெங்காயம், தக்காளி போன்ற காய்கறி விலைகள் பொருட்களுக்கும் குளிர்பதன கிடங்கு தேவை என்று விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தோம். அதேபோல வனவிலங்குகளால் குறிப்பாக, சேதப்படுத்தப்பட்ட விவசாயி விவசாயி உடைமைகளுக்கும் அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், காட்டுப்பன்றிகளை வனவிலங்கு பட்டியலில் இருந்து எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கையை நாங்கள் வைத்திருந்திருகிறோம்.

ஒன்றிய அரசின் கடமை விவசாயிகளுக்கு ஒரு பெரும் சவாலாக இருக்க கூடிய இந்த வனவிலங்கு பட்டியயில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இந்த மாதிரியான எதிர்பார்ப்புகளும் அதேபோல, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்ற காலத்திலும் சரி கொரோனா காலத்திலும் சரி, விவசாயிகள் ஏற்பட்ட கடனைத் தள்ளுபடி அறிவிப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு மத்தியில் இருந்தது. அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் இந்த பட்ஜெட்டில் கொடுக்கப்படவில்லை.

இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் எதிர்பார்த்த பெரிய எதிர்பார்ப்பு எதுவும் நிறைவேறவில்லை. கண்டிப்பாக ஒன்றிய அரசு இந்த பட்ஜெட்டை பற்றி பரிசீலனை செய்து புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories