ஆந்திர மாநிலம், வலசப்பள்ளி கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலை முன்னிட்டு ஆடு, கோழி ஆகியவற்றைப் பலி கொடுக்கும் திருவிழா கொண்டாடுவது வழக்கம். இதன்படி கடந்த 16ம் தேதி கோயில் திருவிழாவில் ஆடு, கோழிகள் பலி கொடுக்கப்பட்டது.
அப்போத சுரேஷ் என்பவர் பலி கொடுப்பதற்காக ஆட்டை பிடித்து நின்று கொண்டிருந்தார். திடீரென ஆடுகளை வெட்டிக் கொண்டிருந்த சலபதி என்பவர் ஆடை வெட்டுவதற்குப் பதிலாக சுரேஷ் தலையை வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவரைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், உடனே சுரேசை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சையில் சேர்த்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் ஆடுகளை வெட்டிய சலபதியைக் கைது செய்தனர்.
மேலும் சலபதி ஆடு வெட்டும்போது மதுபோதையில் இருந்தால் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் இருவருக்குள் ஏதேனும் முன்பை இருக்கிறதா? என்பது பற்றியும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடுவெட்டும் போது தவறுதலாக மனிதனின் தலையை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.