பீகார் மாநிலம், மாதேபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரம்மதேவ் மண்டல். முதியவரான இவர் கொரோனா தடுப்பூசி செலுத்த சென்றுள்ளார். அப்போது, சுகாதார அதிகாரிகள் இதற்கு முன் எப்போது தடுப்பூசி செலுத்திக் கொண்டீர்கள் என கேட்டுள்ளனர்.
இதற்கு அவர், “நான் ஏற்கனவே 11 முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளேன். இப்போது 12 முறையாகத் தடுப்பூசி செலுத்த வந்துள்ளேன் என” என கூறியதைக் கேட்டு சுகாதார ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து எப்படி ஒருவர் 11 முறை தடுப்பூசி செலுத்தப்பட்டது என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பிரம்மதேவ் மண்டல் கூறுகையில், "தனக்கு இடுப்பு, முதுகுவலி, மூச்சிரைப்பு போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தேன். முதல் முறையாகத் தடுப்பூசி போட்ட பிறகு இந்த பிரச்சனைகளில் இருந்து குணமடைந்தனர்.
இதனால் அடுத்தடுத்து தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். செப்டம்பர் மாத்தில் மட்டும் 3 முறை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளேன். இதனால் எனக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இதனால்தான் நான் 11 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்" என தெரிவித்துள்ளார்.
10 மாதத்தில் 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சம்பவம் சுகாதார அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.