புத்தாண்டை முன்னிட்டு கடந்த டிசம்பர் 29ம் தேதி ஐதராபாத்தின் கஜகுடா பகுதியில் உள்ள பிரபல கராட்சி பேக்கரியின் கிளை உள்ளது. அங்கு ஸ்ரீநிவாஸ் என்ற வாடிக்கையாளர் ஒருவர் இனிப்பு உள்ளிட்ட பலகாராங்களை வாங்கியுள்ளார்.
சுவைத்துப் பார்ப்பதற்காக வாங்கிய பொருட்களுக்கான பணத்தை கட்டிவிட்டு மைசூர்பாக் பேக்கிங்கை பிரித்து பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. பாக்ஸில் இருந்த மைசூர் பாக்கில் பூஞ்சை படிந்து போயிருந்திருக்கிறது.
இதனையடுத்து உடனடியாக பூஞ்சை படிந்த இனிப்பு பலகாரங்களை போட்டோ எடுத்து அவர், ட்விட்டரில் புகாரை பதிவு செய்து ஐதராபாத்தின் மேயர், மாநகராட்சி அதிகாரிகள், நகராட்சி நிர்வாக அமைச்சர் என அனைவரிடமும் தெரிவிக்கும் வகையில் டேக் செய்திருக்கிறார்.
அந்த ட்விட்டர் பதிவு வைரலானதை அடுத்து கடந்த ஜனவரி 1ம் தேதி சம்மந்தப்பட்ட பேக்கரியின் விலாசத்தை கேட்டு ஐதராபாத் மாநகராட்சி சார்பில் பின்னூட்டம் செய்யப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் முகவரியை கொடுத்ததும் நேரில் சென்று மாநகராட்சி அதிகாரிகள் விசாரித்திருக்கிறார்கள்.
அப்போது அந்த பேக்கரியில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றாமலும், இருப்பிடமும் அசுத்தமற்று இருந்ததை கண்டு பேக்கரிக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு அபராதம் விதித்திருக்கிறார்கள்.
ஐதராபாத்தின் பழம் பெருமைக்கொண்ட கராச்சி பேக்கரியின் கிளையில் இப்படியான சம்பவம் நடைபெற்றது அதன் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.