இந்தியாவில் 2021ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆய்வு ஒன்று நடத்தியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் 2021ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 31 ஆயிரம் குற்றங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதில் குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை துன்புறுத்தல் தொடர்பாக 4,589 வழக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோல் உணர்வு ரீதியாகப் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக 11,013 வழக்குகள் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உத்தர பிரதேச மாநிலத்தில் மட்டும் 15,823 குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளது. அடுத்து டெல்லியில் 3336, மகாராஷ்டிராவில் 1504 வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த 2020ம் ஆண்டை காட்டிலும் 2021ம் ஆண்டு 30 % பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.