ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் பா.ஜ.க சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் இம்மாநில பா.ஜ.க தலைவர் சோமு வீரராஜூ கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய சோமு வீரராஜூ" ஆந்திர மாநிலத்தில் ஆளுங்கட்சி ஆதரவுடன் தரமற்ற மதுபானங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
2024ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.கவை வெற்றி பெற செய்தால் 70 ரூபாய்க்கு மதுபானங்கள் விற்கப்படும். மேலும் இதில் வருவாய் அதிகரித்தால் ரூ.50க்கும் மதுபானம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க தலைவர் சோமு வீரராஜூவின் இந்தப் பேச்சு ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தான் பா.ஜ.கவின் தேர்தல் வாக்குறுதியா? என பெண்கள் அமைப்பினர் கேள்வி எழுப்பிக் கண்டித்துள்ளனர்.