உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2019ம் ஆண்டு காவல்நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். அப்போது வழக்குப் பதிவு செய்த காவல்துறை அதிகாரி அந்த பெண்ணுக்கு உதவுவதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த அதிகாரி அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று துப்பாக்கி காட்டி வலுக்கட்டாயமாக வன்கொடுமை செய்துள்ளார். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இது குறித்து அந்தப் பெண் உயரதிகாரிகளிடம் புகார் அளிக்க முயன்றபோது, அவரை சமாதானம் செய்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், போலிஸாருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து குழந்தைகள் இருப்பதை அறிந்து அந்தப் பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து அவரிடம் கேட்டபோது இதை வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் காவல்துறை உயரதிகாரிகளிடம் புகார் செய்ததை அடுத்து போலிஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றச்சாட்டில் சிக்கிய அதிகாரியை பாலியா மாவட்டத்திற்குப் பணி இடமாற்றம் செய்துள்ளனர்.