ஹரியானாவின் குருகிராம் மாவட்டத்தில் உள்ள பட்டெளடியில் கடந்த வெள்ளியன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டிய பிரார்த்தனையின் போது இந்துத்வ அமைப்பைச் சேர்ந்த சிலர் உட்புகுந்துள்ளனர்.
அப்போது, அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர் குழந்தைகள் முன்னிலையில், நாங்கள் இயேசுவை அவமதிக்கவில்லை. ஆனால் உங்களிடம் ஒன்றைக் கூறிக் கொள்கிறேன். அடுத்த தலைமுறை குழந்தைகள் மதத்தின் பெயரால் ஈர்க்கக் கூடாது.
அது நடந்தால் இந்தியாவின் கலாசாரமும் பாரம்பரியமும் அழிந்துவிடும். அதனை காக்க நீங்கள் எல்லோரும் ஒரு உறுதிமொழியை எடுத்து ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடுங்கள் எனக் கூறியிருக்கிறார்.
இதே போன்று வேறு ஒரு சம்பவமும் ஹரியானாவின் பட்டெளடியில் நடந்துள்ளது. அங்கு இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்ட போது 10க்கும் மேற்பட்ட வலதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளே நுழைந்து ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டுள்ளனர். அந்த காணொலியும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மேலும், மதத்தின் பேரில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடத்திலும் விஷம பிரசாரத்தை கையாண்டு வரும் ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்வ கும்பலை அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் எனவும் வீடியோவை கண்டவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.