இந்தியா

விமானப்படையில் மீண்டும் ஒரு விபத்து.. விங் கமாண்டர் பலி.. MIG ரக விமானங்களால் தொடரும் ஆபத்து!

விமானப் படைக்குச் சொந்தமான 'MIG - 21' ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியதில், விங் கமாண்டர் ஒருவர் உயிரிழந்தார்.

விமானப்படையில் மீண்டும் ஒரு விபத்து.. விங் கமாண்டர் பலி.. MIG ரக விமானங்களால் தொடரும் ஆபத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில், விமானப் படைக்குச் சொந்தமான 'MIG - 21' ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியதில், விங் கமாண்டர் ஒருவர் உயிரிழந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில், இந்திய விமானப் படைக்கு சொந்தமான MIG - 21 ரக போர் விமானம் நேற்று மாலை பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது, பாலைவன தேசிய பூங்கா பகுதியில் இரவு 8:30 மணியளவில் விமானம் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானத்தை இயக்கிய பைலட் விங் கமாண்டர் ஹர்ஷித் சின்ஹா சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த தகவலை விமானப் படை உறுதி செய்தது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் பயணித்த ஹெலிகாப்டர் தமிழ்நாட்டின் குன்னூரில் விபத்துக்குள்ளாகி 14 பேர் உயிரிழந்த நிலையில், ஒரு மாதத்திற்குள் இன்னொரு விபத்தை விமானப்படை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய ராணுவத்தில் கடந்த 1963ஆம் ஆண்டு MIG ரக விமானங்கள் இணைக்கப்பட்டன. இதுவரை 874 மிக் ரக விமானங்கள் ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

கடந்த 1971 முதல் இதுவரை, 'MIG' ரக போர் விமானங்கள் 482 முறை விபத்துக்குள்ளாகி உள்ளன. இதில், 171 பைலட்கள், 39 பொதுமக்கள் உள்ளிட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்த ஆண்டில் மட்டும் 5 MIG-21 ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகி 3 பைலட்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் விமானப்படையில் இந்த ரக விமானங்கள் மீது கடும் அதிருப்தி நிலவுகிறது.

banner

Related Stories

Related Stories