இந்தியா

இந்தியாவில் ஜனவரியில் ஒமைக்ரான் அலை? - தொற்றுநோய் நிபுணர் எச்சரிக்கை!

ஜனவரியில் ஒமைக்ரான் அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகத் தொற்று நோய் நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் ஜனவரியில் ஒமைக்ரான் அலை? - தொற்றுநோய் நிபுணர் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா திரிபான ஒமைக்ரான் தொற்று தற்போது உலகின் 80 நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலும் 111 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்று வேகமாகப் பரவி வருவதால் உலக சுகாதார அமைப்பு இந்த தொற்றை உலக நாடுகள் எச்சரிகையுடன் கண்காணிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

மேலும் ஒமைக்காரன் தொற்று குறித்து உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொற்று ஜனவரி, பிப்ரவரியில் வேகமாகப் பரவும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கேரளாவில் கோழிக்கோட்டில் அமைந்துள்ள கே.எம்.சி.டி மருத்துவக் கல்லூரியில் ஒமைக்ரான் பரவல் தடுப்பு குறித்து இணைய வழி கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற தொற்றுநோய் நிபுணர் நரேஷ் புரோகித், "ஒமைக்ரான் தொற்று டெல்டாவை விட வேகமாகப் பரவக்கூடியது. இந்தியாவில் டிசம்பர் 2ஆம் தேதி இரண்டு 2 பேருக்கு மட்டும் ஒமைக்ரான் தொற்று இருந்தது.

டிசம்பவர் 14ம் தேதி 45 பேருக்குத் தொற்று பரவியது. 14 நாளில் மட்டும் 36 மடங்கு ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது. இதனால் ஒமைக்ரான் நோயாளி சூப்பர் ஸ்பிரடர் ஆக மாறி, ஒமைக்ரானை பரப்பலாம். இதன் காரணமாக, ஜனவரியில் ஒமைக்ரான் அலை வீசக்கூடும்" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories