இந்தியா

உயிருடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங்கும் மறைவு; சோகத்தில் மூழ்கிய இந்திய பாதுகாப்பு படையினர்!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டர் வருண் சிங் காலமானதாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

உயிருடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங்கும் மறைவு; சோகத்தில் மூழ்கிய இந்திய பாதுகாப்பு படையினர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள காட்டேரி மலைப்பகுதியில் கடந்த டிசம்பர் 8ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

அதில் பயணித்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேரும் விபத்து நடந்த அன்றே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த விபத்தில் சிக்கிய இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவிகித தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார். முதலில் வெலிங்டன்னில் உள்ள ராணுவ மருத்துவமனையில் வருண் சிங்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதனை அடுத்து பெங்களூருவில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக வருண் சிங் மாற்றப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கேப்டன் வருண் சிங் காலமானதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஹெலிகாப்டர் விபத்தில் பயணித்த முப்படைகளின் தலைமைத் தளபதி உட்பட 13 பேரும் உயிரிழந்ததால் சோகத்தில் இருந்த பாதுகாப்பு படையினருக்கு கேப்டன் வருண் சிங் உயிர் பிழைத்தது சற்று ஆறுதலை கொடுத்திருந்தது.

இந்த நிலையில், வருண் சிங்கும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வருண் சிங்கின் மறைவிற்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய விமானப்படை என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, 2020ஆம் ஆண்டு LCA தேஜாஸ் போர் விமானத்தை காப்பாற்றியதற்காக மறைந்த கேப்டன் வருண் சிங்கிற்கு இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் சௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories