இந்தியா

“விபத்தல்ல.. திட்டமிட்ட சதி”: புலனாய்வுக் குழு அளித்த அதிர்ச்சி அறிக்கை- சிக்கும் பா.ஜ.க அமைச்சரின் மகன்!

லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் திட்டமிட்ட சதி என உச்சநீதிமன்ற புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.

“விபத்தல்ல.. திட்டமிட்ட சதி”: புலனாய்வுக் குழு அளித்த அதிர்ச்சி அறிக்கை- சிக்கும் பா.ஜ.க அமைச்சரின் மகன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் திட்டமிட்ட சதி என உச்சநீதிமன்ற புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.

பா.ஜ.க அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி உ.பி மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகளின் பேரணி நடைபெற்றது.

அப்போது, ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன், ஆஷிஷ் மிஸ்ரா பயணம் செய்த ஜீப் விவசாயிகள் மீது மோதியது. இதில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தைத் தொடர்ந்து, உ.பி போலிஸார் ஒன்றிய அமைச்சர் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, சிலரை கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் நடைபெறும் விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார் ஜெயின் மற்றும் மேலும் 3 மூத்த போலிஸ் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.

“விபத்தல்ல.. திட்டமிட்ட சதி”: புலனாய்வுக் குழு அளித்த அதிர்ச்சி அறிக்கை- சிக்கும் பா.ஜ.க அமைச்சரின் மகன்!

லக்கிம்பூர் வன்முறை நிகழ்வு குறித்து விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுக்குழு, விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் விபத்தல்ல திட்டமிட்டு நடத்தப்பட்ட சதிச்செயல் என்று தெரிவித்துள்ளது.

இந்த வன்முறையில் ஈடுபட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட கைது செய்யப்பட்ட 13 குற்றவாளிகள் மீது கொலை முயற்சி குற்றம்சாட்டப்பட வேண்டும் என்றும் இக்குழு உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

விவசாயிகள் கொல்லப்பட்டதில் தனது மகனுக்கு தொடர்பு இல்லை என அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறிவரும் நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories