உலகம் முழுவதும் Google Chrome பிரவுஷரை அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வப்போது தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப Google Chrome அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் Google Chrome பிரவுஷரில் பாதுகாப்பு ரீதியான பிரச்சனைகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இதைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் Google Chrome பயன்படுத்தி கணினி பயனாளர்களைக் கண்காணிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், Google Chrome புதிய வெர்ஷனை அப்டேட் செய்தால் இந்த பிரச்சனையிலிருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
அதேபோல் முந்தைய Google Chrome வெர்ஷனில் உள்ள குறைபாடுகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு புதிய Google Chrome அப்டேட் செய்யப்பட்டுள்ளது என்று Google Chrome நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய Google Chrome வெர்ஷ் எண் 96.0.4664.93. இது விண்டோஸ், மேக், லினக்ஸ் போன்ற தளங்களில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அப்டேட் செய்து பயன்படுத்தவும் பயனாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.