இந்தியா

8 ஆண்டுகளில் 6 முறை விபத்தில் சிக்கிய IAF Mi - 17V5 ரக ஹெலிகாப்டர் - வெளியானது அதிர்ச்சிகர தகவல்!

IAF Mi - 17V5 ரக ஹெலிகாப்டர் குறித்து அதிர்ச்சியளிக்கக் கூடிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

8 ஆண்டுகளில் 6 முறை விபத்தில் சிக்கிய IAF Mi - 17V5 ரக ஹெலிகாப்டர் - வெளியானது அதிர்ச்சிகர தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் சென்ற IAF Mi - 17V5 ஹெலிகாப்டர் குன்னூரில் உள்ள நண்பகல் 12.30 மணியளவில் காட்டேரி நஞ்சப்பா சத்திரம் மலைப்பகுதியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கியதில் இதுகாறும் 7 பேரின் கருகிய உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து குன்னூர் காட்டேரி மலைப்பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் மருத்துவம், ராணுவம் என பல்பேறு குழுக்களும் அங்கு பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கள நிலவரங்கள் குறித்து அறிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குன்னூர் விரைகிறார்.

இதனிடையே ஹெலிகாப்டர் விபத்து குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட மூத்த ஒன்றிய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

மேலும் மாலை 4 மணியளவில் அமைச்சர் ராஜ்நாத் சிங் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார். இந்த நிலையில், IAF Mi - 17V5 ரக ஹெலிகாப்டர் குறித்து அதிர்ச்சியளிக்கக் கூடிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, கடந்த 8 ஆண்டுகளில் 6 முறை இந்த IAF Mi - 17V5 ரக ஹெலிகாப்டர்கள் விபத்துகளை சந்தித்துள்ளது. 2013ம் ஆண்டு ஜுன் 25, 2016ம் ஆண்டு அக்டோபர் 19, 2017ம் ஆண்டு அக்டோபர் 6, 2018 ஆண்டு ஏப்ரல் 3, 2019ம் ஆண்டு பிப்ரவரி 27 மற்றும் இன்று (டிசம்பர் 8, 2021) என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டின் முப்படையின் தலைமை தளபதி செல்லும் ஹெலிகாப்டரின் நிலையே இந்த அளவுக்கு இருக்குமெனில் மக்களுக்கான பாதுகாப்பு எப்படியாக இருக்கும் என சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள், நெட்டிசன்கள் ஒன்றிய பாஜக அரசை கடுமையாக சாடியும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories