நமது நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பயன்பாட்டில் உள்ள கோவிட் 19 தடுப்பூசிகளின் காலாவதி நேரம் மற்றும் தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் உடலில் அவை எவ்வளவு காலம் வீரியத்துடன் செயல்படும் என்று மக்களவையில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பினார்.
அவரது கேள்விகள் வருமாறு:-
(அ) நமது நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பயன்பாட்டில் உள்ள கோவிட் 19 தடுப்பூசிகளின் காலாவதி நேரம் என்ன? தடுப்பூசி போடப்பட்ட நபர்கள் உடலில் அவை எவ்வளவு காலம் வீரியத்துடன் செயல்படும்?
(ஆ) அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் தடுப்பூசிகள் குறித்து ஒன்றிய அரசு கணக்கெடுத்துள்ளதா? பயன்படுத்தப்படாத தடுப்பூசிகளை அவற்றின் காலாவதி தேதிக்கு முன்னதாக கொள்முதல் செய்து மறு விநியோகம் செய்ய முன் வந்துள்ளதா மற்றும் அப்படியானால், அதன் விவரங்கள்?
(இ) பூஸ்டர் டோஸ் உற்பத்தி, விநியோகம் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் ஒன்றிய அரசாங்கம் தயார் நிலையில் உள்ளதா?
(ஈ) பயன்படுத்தப்படாத தடுப்பூசிகளை பூஸ்டர் ஊசிகளாக பயன்படுத்த ஒன்றிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா, அதன் விவரங்கள்?
(உ) நாட்டில் போதுமான அளவு கோவிட் தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் டோஸ்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை உறுதி செய்ய ஒன்றிய அரசாங்கம் எடுத்த சீரிய நடவடிக்கைகள் என்ன? இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மொத்த செலவுகள் மற்றும் ஒதுக்கப்பட்ட / வழங்கப்பட்ட நிதி விபரம் என்ன?
மேற்காணும் கேள்விகளுக்கு ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா அளித்துள்ள பதில் வருமாறு:-
தேசிய கட்டுப்பாட்டாளர் அதாவது மத்திய மருந்துகள் தர நிலை அமைப்பு மூலமாக நமது நாட்டில் பயன்பாட்டில் உள்ள கோவிட் தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டது, இதில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கான காலாவதி காலம் 9 மாதம், கோவாக்சின் தடுப்பூசிக்கு 12 மாதங்கள் மற்றும் ZyCoV-D தடுப்பூசி உற்பத்தி செய்யப் பட்ட நாளிலிருந்து 6 மாதங்கள் ஆகும். COVID-19 தடுப்பூசிகள் மிக சமீபத்தில் உருவாக்கப்பட்டன. எனவே காலாவதி குறித்து அறிவியல் சான்றுகள் இன்னும் உலகளவில் ஆராய்ந்து வருகின்றனர். மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள கோவிட்-19 தடுப்பூசி இருப்புகளை, அவற்றின் பயன்பாட்டை உறுதி செய்யும் வகையில் இந்திய அரசு உன்னிப்பாகக் கண்காணிக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படாத மற்றும் காலாவதியை நெருங்கும் கோவிட்-19 தடுப்பூசி இருப்பு, இந்திய அரசின் ஆலோசனையின் படி, உரிய நேரத்தில் பயன்படுத்துவதற்காக, அந்தந்த மாநில அரசால் மறு விநியோகத்திற்காக எடுக்கப்பட்டது.
பூஸ்டர் டோஸ்களை நிர்வகிப்பது தொடர்பாக, நோய்த் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவும் (NTGI) மற்றும் Covid-19க்கான தடுப்பூசி நிர்வாகத்திற்கான தேசிய நிபுணர் குழுவும் ((NEGVAC) அதன் தொடர்புடைய அறிவியல் சான்றுகளை ஆலோசித்து வருகின்றன. பயோடெக்னாலஜி துறையின் (டி.பி.டி.) பொதுத்துறை நிறுவனமான (பி.ஆர்.ஏ.சி.) பயோடெக்னாலஜி இண்டஸ்ட்ரி ரிசர்ச் அசிஸ்டன்ஸ் கவுன்சில் (பி.ஆர்.ஏ.சி.) மூலம் செயல்படுத்தப்படும் மிஷன் கோவிட் சுரக்ஷா-இந்திய கோவிட்-19 தடுப்பூசி மேம்பாட்டு பணியின் கீழ், கோவிட்-19ஐ வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக, பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் (பி.பி.ஐ.எல்.) மற்றும் இந்தியன் இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் (ஐ.ஐ.எல்.) ஆகியவற்றில் உற்பத்தி வசதிகளை மேம்படுத்துவது திட்டமிடப்பட்டுள்ளது.
ஹைதராபாத் இந்திய இம்யூனாலஜிகல்ஸ் லிமிடெட் (ஐஐடு), மிஷனின் கீழ் அங்கீகரிக்கப்பட்டு, COVAXIN® மருந்துப்பொருள் (DS)இன் உற்பத்தித் திறன் அடைந்துள்ளது. பெங்களூரு, மலூரில் உள்ள BBIL வசதியின் சரிபார்ப்பு நிறைவடைந்தது மற்றும் மருந்துப்பொருள் (DS) உற்பத்தி ஆகஸ்ட் 2021 இல் தொடங்கியது. மேலும், புலந்த்ஷாஹரில் உள்ள Bharat Immunologicals and Biologicals Cor-poration Limited (BIBCOL)இல் வசதிகளை அதிகரிப்பதற்கும் மற்றும் ஹாஃப்கைன் பயோ ஃபார்மாசூட்டிகல் கார்ப்பரேஷன் லிமிடெட் (HBPCL), மும்பை பரிசீலனையில் உள்ள COVAXIN® உற்பத்திக்காக. ரூ.260 கோடிமேம்படுத்தப்பட்ட COVAXIN® உற்பத்திக்கான வசதியை மேம்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 27.25கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது.கூடுதலாக, PSU BIRAC உடன் DBT ஆனது, குஜராத் கோவிட் தடுப்பூசிகூட்டமைப்பில் (GCVC) COVAXIN® இன்பெருக்கப்பட்ட உற்பத்திக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கான நிபுணர் ஆலோசனை வழங்குகிறது.
கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதற்காக நடப்பு நிதியாண்டில், அதாவது 2021-22ல், 35,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. 2021 நவம்பர் 27ஆம் தேதி நிலவரப்படி, ரூ 19,675.46 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இது கோவிட்-19 தடுப்பூசியை இலவசமாக அளிப்பதற்கு பயன்படுத்தப்பட்டது.
இவ்வாறு அமைச்சர் தனது பதிலில் கூறியுள்ளார்.