உத்தர பிரதேசம், உத்தரகாண்ட, கோவா, பஞ்சாம், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ், பா.ஜ.க கட்சி தலைவர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால், அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.350 பிடித்தம் செய்யப்படும் என பஞ்சாப்பில் வெளியாகும் நாளேடு ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதையடுத்து, பத்திரிக்கை செய்திக்குப் பஞ்சாப் தேர்தல் ஆணையம் விளக்கம் கொடுத்துள்ளது. அதில், தேர்தலில் வாக்களிக்காத நபர்களின் வங்கி கணக்கிலிருந்து பணம் பிடித்தம் செய்யப்படும் என பரவிய தகவல் பொய்யானது.
இது குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிக்கையிடம் விசாரணை நடந்து வருகிறது. இனி இதுபோன்று பொய்யான தகவல்களைப் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். கோவா, மணிப்பூர் மாநிலங்களில் சட்டப் பேரவையின் பதவிக்காலம் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் முடிகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.