நாட்டில் உள்ள பிற மாநில அரசுகள் எல்லாம் குஜராத், உத்தர பிரதேசத்தில் நடைபெறும் ஆட்சி நிர்வாகத்தையே பின்பற்ற வேண்டும் எனக் கூறி தொடர்ந்து பாஜகவினர் மல்லுக்கட்டி வருகின்றனர்.
ஆனால், உண்மை நிலையோ தலைக்கீழாகதான் உள்ளது. குற்றச்சம்பவங்களுக்கு பிரபலமான மாநிலமாகவே பாஜக ஆட்சி செய்யக்கூடிய உத்தர பிரதேசம் இருந்து வருகிறது என்பது நாட்டு மக்கள் அறியாமல் இருக்கவில்லை.
அப்படியான மாநிலத்தில் பெண்கள், பெண் குழந்தைகள், சிறுபான்மையினர்களை அடுத்து முக்கிய ஆவணங்களுக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழலே உள்ளது என்பது அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.
அதில், கான்பூர் மாவட்டத்தில் உள்ள செளபிப்புர் அரசு அலுவலகத்தில் இருந்து ஆடு ஒன்று முக்கியமான ஆவணங்களை வாயில் கவ்விய படி ஓடுவது அதனை துரத்திக் கொண்டு அரசு ஊழியர் பின் தொடர்வதுமாக உள்ளது.
இது தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து, செளபிப்புர் வளர்ச்சி அலுவலர் மனுலால் யாதவ், “அலுவலக கேன்டீனில் இருந்த கிழிந்த காதிகங்களையே ஆடு கவ்வியதே தவிர முக்கிய ஆவணங்கள் அடங்கிய காகிதங்கள் இல்லை என மறுப்புத் தெரிவித்துள்ளார்.