இந்தியா

“உ.பி தேர்தலுக்காக கலவரத்தை தூண்ட சதி?” : அயோத்தியை தொடர்ந்து ‘மதுரா’வை கையில் எடுக்கும் பா.ஜ.க!

அயோத்தியில் ராமர் கோயில் பணிகள் நடைபெறும் நிலையில் மதுராவிலும் கிருஷ்ணர் கோயில் கட்டப்படும் என உ.பி பா.ஜ.க துணை முதல்வர் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“உ.பி தேர்தலுக்காக கலவரத்தை தூண்ட சதி?” : அயோத்தியை தொடர்ந்து ‘மதுரா’வை கையில் எடுக்கும் பா.ஜ.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உத்தர பிரதேசம் மாநிலத்தின் மதுரா நகரில் கிருஷ்ண ஜென்ம பூமி என்று கோயில் ஒன்று உள்ளது. இது கடவுள் கிருஷ்ணர் பிறந்த இடமாகவும் அப்பகுதி மக்களிடையே நம்பிக்கை உள்ளது. ஆனால் அதற்கான எந்தவித ஆதாரங்களும் இருந்ததாகத் தெரியவில்லை என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் 17ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னர் அவுரங்கசீப்பால், ஷாயி ஈத்கா என்ற மசூதி ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் உ.பி-யில் தேர்தல் நெருங்குவதால் அயோத்தி போல மதுராவில் புதுவகையான பிரச்சனையை இந்துத்வா மற்றும் பா.ஜ.கவினர் கையில் எடுத்துள்ளனர்.

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை வெளியிட்ட பிறகு மதுரா பிரச்சினை மீண்டும் கிளம்பியது. இது தொடர்பான வழக்குகள் மதுரா நீதிமன்றங்களில் இந்து அமைப்புகளால் தொடரப்பட்டுள்ளன.

இந்நிலையில், அயோத்தியில் இந்து அமைப்புகளால் 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6 வரவுள்ளது. இதை ஒவ்வொரு ஆண்டும் வெற்றி தினமாக இந்து அமைப்புகள் கொண்டாடி வருகின்றன. இந்த நாளில் மதுராவின் கியான்வாபி மசூதியினுள் கிருஷ்ணர் சிலை வைக்கப் போவதாக சில இந்து அமைப்புகள் மிரட்டி வருகின்றன.

“உ.பி தேர்தலுக்காக கலவரத்தை தூண்ட சதி?” : அயோத்தியை தொடர்ந்து ‘மதுரா’வை கையில் எடுக்கும் பா.ஜ.க!

இந்தச் சூழலில், உத்தர பிரதேச துணை முதல்வரே, அயோத்தியில் ராமர் கோயில் பணிகள் நடைபெறுகின்றன. மதுராவிலும் கிருஷ்ணர் கோயில் கட்டப்படும் எனத் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பிரச்சாரம் தொங்கிய நிலையில் உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “அயோத்தியில் ராமர், வாரணாசியின் விஸ்வநாதர் கோயில் பணிகள் நடைபெறுகின்றன. மதுராவிலும் கிருஷ்ணர் கோயில் கட்டப்படும்! ஜெய்ஸ்ரீராம்! ஜெய்சிவசம்போ! ஜெய்கிஷண்!” எனத் தெரிவித்துள்ளார்.

மதுராவில் கோயில் சர்ச்சையை கிளப்பி பா.ஜ.க உ.பி.யில் மீண்டும் ஆட்சி அமைக்க திட்டம் தீட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

banner

Related Stories

Related Stories