ஆந்திரா மாநிலம், பெத்தக்கபதூரில் உள்ள அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஹனுமந்து. இச்சிறுவன் பக்கத்து வீட்டி பையனை காவல்நிலையம் அழைத்துச் சென்று , அடிக்கடி என் பென்சில் திருடுவதாக புகார் கூறினான். இதைக் கேட்டு காவல்நிலையத்தில் இருந்து போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் போலிஸார் இருவரையும் அருகில் அழைத்து பேசினர். அப்போது ஹனுமந்து, 'இவன் என்னுடைய பென்சிலை அடிக்கடி திருடுகிறான் சார்.அந்த பென்சில் சிறிதாக ஆன பிறகு கொடுக்கிறான். இதனால் எனக்கு என்னபயன். எனவே இவன பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்' என கூறினான்.
பின்னர் போலிஸார் அந்த சிறுவனிடம் இது குறித்து கேட்டனர். இதற்கு அச்சிறுவன், 'இல்லசார். நான் பென்சிலை எடுத்தாலும் இவனிடமே மீண்டும் கொடுத்துவிடுவேன்' என கூறினான். இதையடுத்து போலிஸார் இரண்டு சிறுவர்களுக்கு அறிவுரை வழங்கி, நண்பர்களாக கை குலுக்கவைத்து அவர்களை வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து, சிறுவன் புகார் கூறிய, ஆந்திரா போலிஸார் தங்களது தங்களது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.