ஏர்டெல் நிறுவனம் தமது prepaid recharge கட்டணத்தை உயர்த்தியுள்ளது. நவம்பர் 26ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்ட கட்டணம் நடைமுறைக்கு வரும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கட்டண உயர்வு காரணமாக ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் கட்டண செலவு ரூ.100 அதிகரிக்கக்கூடும். மேலும் ரீசார்ஜ் திட்டத்தின்படி ரூ.20 லிருந்து ரூ. 500 வரை கட்டணம் உயர்ந்துள்ளது.
இதற்கு முன் இருந்த ஏர்டெல் காம்போ prepaid recharge திட்டம் ரூ.2,999 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ரூ.1498ல் இருந்த திட்டம் தற்போது ரூ.1799க்கு உயர்ந்துள்ளது. இப்படி ஏர்டெல்லின் எல்லா prepaid recharge கட்டணமும் உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு பயனர்களிடமிருந்து கிடைக்கும் வருவாயை ஈடுசெய்யும் நோக்கத்துடனே இந்தக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. 20லிருந்து 25% கட்டணம் உயர்த்தப்பட்டதை அறிந்து ஏர்டெல் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஏர்டெல்லை அடுத்து மற்ற டெலிகாம் நிறுவனங்களும் தங்களின் கட்டணத்தை உயர்த்துமோ என்ற அச்சம் அந்தந்த ஆபரேட்டர்களின் பயனாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.