உத்தர பிரதேச மாநிலம், லலித்பூர் மாவட்டத்திற்குட்பட்ட வீர் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்து. இவர் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி இரவு குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் தூக்கிக் கொண்டிருந்த தனது மூன்று குழந்தைகளான அஞ்சனி, ரட்டோ, புட்டோ ஆகியோரை இரும்பு கம்பியால் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
பின்னர் வீட்டின் சமையல் அறையிலிருந்து சிலிண்டரை திறந்து விட்டுவிட்டு வெளியே வந்து வீட்டிற்குத் தீவைத்துள்ளார். இதைப் பார்த்து அருகே இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால் மூன்று குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து குழந்தைகளை எறித்து கொலை செய்த தத்தை சித்துவை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு லலித்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரணை நடத்தி வந்த நீதிபதிகள் இறுதித் தீர்ப்பு வழங்கினர். குழந்தைகளை எறித்து கொலை செய்த சித்துவுக்கு தூக்குத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி நிர்பய் பிரகாஷ் உத்தரவிட்டார்.