மகாராஷ்டிரா மாநிலம் துலே பகுதியைச் சேர்ந்தவர் சுஹித் சர்மா. இளைஞரான இவர் onePlus Nord 2 என்ற செல்போனை பயன்படுத்தி வருகிறார். இந்த போனை தனது வலது பக்க பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த போது திடீரென phone வெடித்தது. இதனால் அவரது வலது பக்க தொடையில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சுஹித் சர்மா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.phone வெடித்தது குறித்து சுஹித் சர்மா தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை. உங்கள் தயாரிப்பு என்ன செய்திருக்கிறது என்று பாருங்கள். பின்விளைவுகளுக்குத் தயாராக இருங்கள். மக்களின் உயிருடன் விளையாடுவதை நிறுத்துங்கள்” என பதிவிட்டுள்ளார். மேலும் இந்த ட்விட்டரில் வெடித்த போன் மற்றும் தொடையில் ஏற்பட்ட காயம் போட்டோவையும் இணைத்துள்ளார்.
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் பயனர் ஒருவரின் கைப்பயில் OnePlus phone வெடித்தது. இதையடுத்து டெல்லி வழக்கறிஞர் ஒருவரின் அங்கியிலிருந்த போது phone வெடித்தது. தற்போது இளைஞர் ஒருவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்தபோது வெடித்துள்ளது. அடுத்தடுத்து OnePlus phone வெடித்துள்ளது அதன் பயனர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.