டெல்லியில் உள்ள ஹஸ்ரத் நிஜாமுதீன் பகுதியில் உள்ள நடைபாதையில் வருபவர்கள் ஜுங்கு, சோனு என்ற இளைஞர்கள். அவர்களை போன்றே பாரபுல்லா ஃப்ளைவேயில் வசித்தவர்கள் 40 வயது மதிக்கத்தக்க தாமஸ் லோகேஷ் பகதூர்.
இவர்கள் அனைவருமே தினக்கூலியாக வேலைப் பார்த்து அன்றாட நாளை கடப்பவர்கள். இதில் தாமஸும், லோகேஷ் பகதூரும் ஜுங்குவிடம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடனாக 50 ரூபாயை பெற்றிருக்கிறார்கள்.
இரண்டு வாரங்களாகியும் கடனை திருப்ப தராததால் அதனை ஜுங்கு கடந்த திங்கள் அன்று கேட்டிருக்கிறார். அப்போது பொதுவெளியில் வைத்து ஜுங்குவை தாமஸும் பகதூரும் கிண்டல் செய்து அனுப்பியிருக்கிறார்கள்.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஜுங்கு இது குறித்து சோனுவிடம் கூறியிருக்கிறார். அப்போது இருவரும் தாமஸையும் பகதூரையும் தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.
அதன்படி பாரபுல்லா ஃப்ளைவேயில் நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த தாமஸ், லோகேஷ் பகதூரின் கழுத்து ஐந்து ஆறு முறை கத்தியால் குத்திவிட்டு அவ்விடத்தை விட்டு தப்பியோடியிருக்கிறார்கள்.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலிஸார் கத்திக்குத்துக்கு ஆளானவர்களை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார்கள். இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
பின்னர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து இரண்டே மணி நேரத்தில் தாமஸையும், பகதூரையும் குத்திக் கொன்றுவிட்டு தப்பிய ஜுங்கு, சோனுவை கைத் செய்து போலிஸ் காவலில் அடைத்தனர். மேலும் கொலைக்காக பயன்படுத்தப்பட்ட கத்தியையும் கைப்பற்றினர்.