இந்தியா

13 மாநில இடைத்தேர்தலிலும் மண்ணைக் கவ்வும் பா.ஜ.க : 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்கான முன்னோட்டமா?

13 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

13 மாநில இடைத்தேர்தலிலும் மண்ணைக் கவ்வும் பா.ஜ.க : 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்கான முன்னோட்டமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் காலியாக உள்ள 3 மக்களவைத் தொகுதி மற்றும் 29 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற்றது.

மத்திய பிரதேசம், இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மற்றும் யூனியன் பிரதேசமான தாத்ரா நாகர் ஹவேலிவில் தலா ஒரு மக்களவைத் தொகுதிக்குத் தேர்தல் நடைபெற்றது.

அதேபோல், அசாம், மேற்குவங்கம், இமாச்சல பிரதேசம், மேகாலயா, பீகார், கர்நாடகா, ராஜஸ்தான், அந்திரா, ஹரியாணா, மகாராஷ்டிரா, மிசோரம், தெலங்கானா, மத்திய பிரதேசம் ஆகிய 13 மாநிலங்களில் 29 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க கடும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது.

குறிப்பாக, மேற்கு வங்கத்தில் நடைபெற்ற 4 தொகுதிகளுக்கான தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர்கள் அனைவரும் ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேலான வித்தியாசத்தில் படு தோல்வியடைந்தனர்.

அதேபோல், இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மாண்டி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.கவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இங்கு ஏற்கெனவே பா.ஜ.க வெற்றி பெற்றிருந்த நிலையில் தற்போது காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.

மேலும் ராஜஸ்தான், அசாம், கர்நாடகா, மேகாலயா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர்கள் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories