இந்தியா

“விமானங்கள் ரத்து.. அமலாகும் ஊரடங்கு..?” : சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் - கலக்கத்தில் உலக நாடுகள்!

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து அனைத்துப் பள்ளிகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

“விமானங்கள் ரத்து.. அமலாகும் ஊரடங்கு..?” : சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் - கலக்கத்தில் உலக நாடுகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாக கடைபிடிக்கவேண்டும் என உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பல முக்கிய நாடிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து அனைத்துப் பள்ளிகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அங்கு பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது கட்டுப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஆனால் தற்போது வெளிநாட்டில் இருந்து சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மூத்த தம்பதியிடம் இருந்து கொரோனா மீண்டும் பரவியதாக சீன அரசு சந்தேகத்துள்ளது. மேலும் மூத்த தம்பதிகளிடம் வந்த சுற்றுலாப் பயணிகள் அவர்கள் சென்ற மாகாணங்களிலும் கண்காணிப்பை தீவிரப்பட்டுத்தியுள்ளது.

மேலும் ஷாங்காய், லியான், இன்சு உள்ளிட்ட 5 மாகாணங்களில் கண்காணிப்பை சீனா தீவிரப்படுத்தி உள்ளது.வடமேற்கு சீனாவில் உள்ள வான்சூ நகரில் இருந்து கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இன்றி வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மாங்கோலியாவிலும் எந்த நகரத்தில் இருந்தும் மக்கள் வெளியேறத் தடை விதித்துள்ளது சீன அரசு.

அதுமட்டுமல்லாது, நூற்றுக்கணக்கான விமானங்களை சீனா ரத்து செய்துள்ளது. தொற்று பரவக்கூடிய இடங்களை கண்டறிந்து வட்டார அளவில் முழு முடக்கத்தை கடைபிடிக்கவும் நடவடிக்கை எடுத்து, கொரோனா பரிசோதனையும் அதிகரிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு பரவ தொடங்கியதால் உலக மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories