இந்தியா

நிலக்கரி பற்றாக்குறையில் இந்தியா.. நிலைகுலைய வைக்கும் கோல் இந்தியாவின் அறிவிப்பு: இரும்பு ஆலைகளின் கதி?

மின்சார தேவைகளுக்கு மட்டுமே நிலக்கரி விநியோகிக்கப்படும் என கோல் இந்தியா தெரிவித்துள்ளது.

நிலக்கரி பற்றாக்குறையில் இந்தியா.. நிலைகுலைய வைக்கும் கோல் இந்தியாவின் அறிவிப்பு: இரும்பு ஆலைகளின் கதி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா முழுவதும் நிலக்கரிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தியை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதால் விரைவில் நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு மணி நேரம் தினமும் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. அதேபோல், பஞ்சாப் மாநிலத்தில் 3 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும், நாட்டில் உள்ள 135 அனல் மின் நிலையங்களில் 115 நிலையங்களில் மின் உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால், ஒன்றிய அரசோ விரைவில் நிலக்கரி பிரச்சனை சரி செய்யப்பட்டுவிடும் என கூறிவருகிறது.

அதேபோல், கோல் இந்தியா நிறுவனமும் அக்டோபர் மாதத்திற்கு மின் உற்பத்தி நிலையங்களுக்கு தினந்தோறும் 14.3 லட்சம் டன் நிலக்கரி விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும், அதை 15.10 லட்சம் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.

நிலக்கரி பற்றாக்குறையில் இந்தியா.. நிலைகுலைய வைக்கும் கோல் இந்தியாவின் அறிவிப்பு: இரும்பு ஆலைகளின் கதி?

மேலும் நிலக்கரியைக் கொண்டு செல்வதற்கான கட்டமைப்புகளையும் உருவாக்கி வருவதாகத் தெரிவித்திருந்த நிலையில், மின்சார உற்பத்திக்கு மட்டுமே நிலக்கரி அனுப்பப்படும் என கோல் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், நாட்டின் நலன் கருதி மின் நிலையங்களுக்கு மட்டுமே தற்போது நிலக்கரி வழங்கப்படும் என்றும் இது தற்காலிகமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோல் இந்தியாவின் இந்த அறிவிப்பால் நாடுமுழுவதும் உள்ள அலுமினியம் மற்றும் இரும்பு தொழிற்சாலைகளுக்கு நிலக்கரி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த தொழிற்சாலைகளும் கடும் நிதி இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories