இந்தியா

16 லாக்கர்களில் கத்தை கத்தையாக பணம்.. IT ரெய்டில் சிக்கிய ரூ.142 கோடி ரூபாய் ரொக்கம், ரகசிய பென்டிரைவ்!

மருந்து நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.142 கோடி ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

16 லாக்கர்களில் கத்தை கத்தையாக பணம்.. IT ரெய்டில் சிக்கிய ரூ.142 கோடி ரூபாய் ரொக்கம், ரகசிய பென்டிரைவ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மருந்து உற்பத்தி நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.142 கோடி ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஹைதராபாத்தில் உள்ள ஹெடெரோ பார்மா எனும் நிறுவனம், மருந்துகள் மற்றும் மருந்து தயாரிப்புக்கான மூலப் பொருட்களை அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில் இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக 6 மாநிலங்களில் 50 இடங்களில் கடந்த 6ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்தச் சோதனையின்போது பல்வேறு வங்கிகளில் 16 லாக்கர்களை இந்நிறுவனம் பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. அதிலிருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.142.87 கோடி ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

16 லாக்கர்களில் கத்தை கத்தையாக பணம்.. IT ரெய்டில் சிக்கிய ரூ.142 கோடி ரூபாய் ரொக்கம், ரகசிய பென்டிரைவ்!

மேலும், மறைவிடங்களில், கணக்கு புத்தகங்கள், டிஜிட்டல் பதிவுகள், போலி நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள், நிலங்கள் வாங்கியதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆவணங்கள் அனைத்தையும் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் அவை டிஜிட்டல் பதிவுகளாக மாற்றப்பட்டு பென்டிரைவ் உள்ளிட்டவற்றில் பதிவுசெய்யப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

கணக்கில் காட்டப்படாத சொத்துகளின் மதிப்பு ரூ.550 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

லாக்கரில் பணத்தை கத்தை கத்தையாக அடுக்கி வைத்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளன.

banner

Related Stories

Related Stories