பெற்றோரை எதிர்த்து காதலனுடன் சென்ற பெண்ணையும் அவர்களுக்கு உதவிய பெண்ணையும் நடு ரோட்டில் டயர் கட்டி நடனம் ஆட வைத்த நிகழ்வு வெளிச்சத்துக்கு வந்துள்ளது/
மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள காந்த்வானி காவல் நிலையில் இது தொடர்பான வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, இளம் பெண் ஒருவர் தனது காதலனுடன் பெற்றோரை எதிர்த்து சென்றிருக்கிறார். அந்த பெண்ணுக்கு அவரது சகோதரி உதவியுள்ளார்.
இதனையறிந்த உறவினர்கள் கடுமையான ஆத்திரத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் அவ்வாறு காதலனுடன் ஓடிய இளம் பெண்ணையும் அவருக்கு உதவிய பெண்ணையும் காதலன் உட்பட மூவரது கழுத்தில் இருசக்கர வாகன டயரை மாட்டிவிட்டு நடு ரோட்டில் பொது மக்கள் முன்னிலையில் நடனம் ஆட வைத்திருக்கிறார்கள்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியிருக்கிறார். இதனையடுத்து மனிதாபிமானமே இல்லாமல் இவ்வாறான செயல்களை புரிந்த பெண்ணின் தந்தை, சகோதரன் மற்றும் உறவினர்கள் இந்திய தண்டனைச் சட்டம் 254, 323, 506, 354, 363, 343 மற்றும் 147 ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ள தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதித்யா சிங், ஐந்தில் நால்வர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றார்.