இந்தியா

உ.பி-யில் மீண்டும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. வழக்குப் பதிய மறுத்த போலிஸ் - நாகூசாமல் பொய் பேசும் யோகி!

உத்தர பிரதேசத்தில் டெல்லி பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி-யில் மீண்டும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. வழக்குப் பதிய மறுத்த போலிஸ் - நாகூசாமல் பொய் பேசும் யோகி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபிறகு பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால் இவரால் எப்படி இப்படி நாகூசாமல் பொய்பேச முடிகிறதோ என்று தெரியவில்லை.

இந்தியாவிலேயே உத்தர பிரதேசத்தில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடைபெறுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால் இவரோ பெண்கள் பாதுகாப்பாக உள்ளதாகப் பொய் பேசி வருகிறார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட திருவிழாவிற்குச் சென்றுவிட்டு தாயுடன் வீடுதிரும்பிய இளம்பெண்ணை கடத்தி மூன்று பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது.

தற்போது, டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உ.பியில் உறவினரின் திருமணத்திற்குச் சென்றபோது அவரை காரில் கடத்திச் சென்று மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் உறவினரின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காகக் கடந்த 13ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோருக்கு வந்துள்ளார். பின்னர் திருமண விழா முடிந்து டெல்லி செல்வதற்காக அருகே பேருந்து நிலையத்தில் காத்திருந்துள்ளார்.

அப்போது, அங்கு காரில் வந்த மூன்று பேர், பிஜ்னோர் நகரில் இறக்கிவிடுவதாகக் கூறி அவரை ஏமாற்றி காரில் ஏற்றியுள்ளனர். காரில் செல்லும்போது கத்தியைக் காட்டி மூன்று பேரும் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் வழியிலேயே அந்த பெண்ணை இறக்கிவிட்டுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் நாங்கல் சோதி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றார். அப்போது போலிஸார் வழக்குப் பதிவு செய்ய மறுத்துள்ளனர். பின்னர் முன்னாள் எம்.பி. பரந்தேந்து சிங் தலையிட்ட பிறகு போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories