தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் காயத்திரி. இவரது கணவர் ஸ்ரீதர். இந்த தம்பதியினர் சினிமா பாடல்களுக்கு டிக்டாக் செய்து பிரபலமடைந்துள்ளனர். மேலும் காயத்திரி கோகவரம் பகுதியின் பா.ஜ.க தலைவராக உள்ளார்.
இந்நிலையில், ஏலூரை சேர்ந்த கவுரிசங்கர் என்பவர் தனது மகளுக்கு வெளிநாட்டு மருத்துவ சீட் வாங்கித்தர உதவ முடியுமா என இந்த தம்பதியிடம் கேட்டுள்ளார். அப்போது அவரிடம் தங்களுக்கு வெளிநாடுகளில் பல கல்லூரிகளில் இருப்பவர்களைத் தெரியும், நாங்கள் சீட்டு வாங்கி கொடுக்கிறோம் என கூறியுள்ளனர்.
இவர்களின் பேச்சை நம்பி, அவரும் பல தவணையாக ரூ.44 லட்சம் வரை கொடுத்துள்ளார். ஆனால், இவர்கள் சொன்னபடி மருத்துவ சீட்டு வாங்கி கொடுக்கவில்லை. அதேபோல், தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அரிசி ஆலை தொடங்குவதற்கு வங்கியில் கடன் வாங்கி தருவதாக 4 பேரிடம் தலா 4 லட்சம் ரூவாய் வரை வசூல் செய்துள்ளனர்.
அதேபோல் ஒன்றிய அரசின் அனுமதி பெற்று தருவதாகத் தனியார் மருத்துவனை நிர்வாகத்திடம் பல லட்சங்களை மோடி செய்துள்ளனர் இந்த தம்பதியினர். இந்த மோசடி செய்த பணத்தைக் கொண்டு சொகுசாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த மோசடி தம்பதி குறித்து போலிஸாருக்கு புகார்கள் வந்ததை அடுத்து காயத்ரி மற்றும் ஸ்ரீதரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.