இந்தியா

EMI வசதி பெற க்ரெடிட் கார்டு தேவையில்லை.. SBI டெபிட் கார்டிலேயே இந்த வசதியைப் பெறுவது எப்படி?

ஸ்டேட் பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி EMI பெறும் வசதியை வழங்குகிறது.

EMI வசதி பெற க்ரெடிட் கார்டு தேவையில்லை.. SBI டெபிட் கார்டிலேயே இந்த வசதியைப் பெறுவது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஸ்டேட் பேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி EMI பெறும் வசதியை வழங்குகிறது. எஸ்பிஐ டெபிட் கார்டு மூலம் 8,000 ரூபாய் முதல் ரூ.1 லட்சம் வரை கடனாக பெற்று அதற்கு EMI செலுத்தலாம்.

வழக்கமாக கிரெடிட் கார்டுகளுக்கு மட்டுமே EMI வசதி கிடைக்கும். ஆனால், ஸ்டேட் பேங்க் தங்களது வாடிக்கையாளர்களுக்காக டெபிட் கார்டின் மூலமாகவே EMI வசதி பெற வழிவகை செய்துள்ளது.

எஸ்பிஐ டெபிட் கார்டுகள் மூலம் நேரடியாக கடைகளில் சென்று பொருட்களை வாங்கும்போதும், அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்கள் வாயிலாக ஆன்லைனில் வாங்கும்போதும் இந்த வசதியைப் பெறமுடியும்.

கடன் தொகைக்கு எஸ்பிஐ வங்கி 2 வருட MCLR விகிதத்துடன் 7.5 சதவீதம் வட்டியை வசூலிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார்டு மூலம் நீங்கள் 6 மாதம், 9 மாதம், 12 மாதம் அல்லது 18 மாதம் EMI சேவைகளைப் பெறலாம்.

டெபிட் கார்டு மூலம் EMI வசதி பெற தகுதி பெற்றவரா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும். இதற்கு வாடிக்கையாளர்கள் வங்கியில் பதிவாகியிருக்கும் எண்ணில் இருந்து ‘DCEMI’-ஐ தொடர்ந்து உங்கள் டெபிட் கார்டின் கடைசி 4 எண்களை 567676 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.

நீங்கள் கடன் பெறத் தகுதியான தொகை, அது செல்லுபடியாகும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட விவரங்கள் வாடிக்கையாளர்களுக்கு வங்கியிலிருந்து அனுப்பப்படும். டெபிட் கார்டு மூலம் EMI செலுத்தும் திட்டம் முற்றிலும் இலவசம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories