இந்தியா

“நீட் தேர்வு வினாத்தாள் லீக்?” : மாணவர்கள் அதிர்ச்சி - சி.பி.ஐ விசாரணை தேவை என கொந்தளிப்பு!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்துள்ளதாக வெளியான தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“நீட் தேர்வு வினாத்தாள் லீக்?” : மாணவர்கள் அதிர்ச்சி - சி.பி.ஐ விசாரணை தேவை என கொந்தளிப்பு!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நாடு முழுவதும் இன்று முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிந்துள்ளதாக வெளியான தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு நாளை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நடைபெறவுள்ளது. தேர்வுக்கான இறுதிக்கட்ட தயாரிப்புகளில் மாணவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நீட் தேர்வுக்கான வினாத்தாள் டெலகிராம் உள்ளிட்ட சமூக ஊடக செயலிகளின் வாயிலாக கசிந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், சில டெலகிராம் குழுக்களில் தேர்வு தொடங்குவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்னதாக வினாத்தாள் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது மாணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆனால், நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக கூறப்படும் தகவல் உண்மையல்ல என்றும், இதுபோன்ற செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பலரும் #OperationNeet, #CBIForNEET ஆகிய ஹேஷ்டேக்குகளில் நீட் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். நீட் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்துள்ளன.

banner

Related Stories

Related Stories