உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை தோற்கடித்து வெற்றி பெற்றார் ஸ்மிருதி இரானி. இவர் ஒன்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராகவும் உள்ளார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அமேதி தொகுதியில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், "70 ஆண்டுகள் காங்கிரஸ் குடும்பத்தினரால் இந்தத் தொகுதி மக்களுக்கு தண்ணீர் கூட வழங்க முடியவில்லை" என விமர்சித்தார்.
இதையடுத்து அவர் அருகே இருந்த லஸ்ஸி கடைக்குச் சென்றார். அங்கு கடையின் உரிமையாளரிடம் சில கேள்விகளைக் கேட்டு அதை செல்போனில் வீடியோ எடுத்தார். அந்த கடைக்காரரிடம் ஸ்மிருதி இரானி, "காந்தி குடும்பத்திலிருந்து யாராவது இங்கு வந்திருக்கிறார்களா?" எனக் கேள்வி கேட்டார்.
இதற்குப் பதிலளித்த அவர், "ஆம். ராகுல் காந்தி, பிரியங்கா என எல்லோரும் வந்திருங்காங்க" எனக் கூறினார். இவரது இந்த பதிலைக் கேட்டு ஸ்மிருதி இரானி என்ன செய்வது என்று தெரியாமல் அசடுவழிந்தார். மேலும் அவரை சுற்றிச் இருந்த அனைவரும் வாய்விட்டு சிரித்துவிட்டார்கள். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
லஸ்ஸி கடைக்காரரிடம் கேள்வி கேட்டு அசிங்கப்பட்ட ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் வீடியோவை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.